மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக - களையிழந்த காங்கிரஸ் அலுவலகம்...
மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றிக்குத் தேவையான பாதிக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால், காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் 230 இடங்கள் கொண்ட மத்திய பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்பட்டி பாஜக 155 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 72 இடங்களுடன் பின்தங்கியுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாஜக 3 மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவிலும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றுவருகிறது. அம்மாநிலத்தில் வெற்றிக்குத் தேவையான பாதிக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிப்பதால், காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.