For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அதானியின் பாக்கெட்டுகளில் பணத்தை நிரப்புகிறது பாஜக!” - ராஜஸ்தான் பரப்புரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

06:47 PM Nov 16, 2023 IST | Web Editor
“அதானியின் பாக்கெட்டுகளில் பணத்தை நிரப்புகிறது பாஜக ”   ராஜஸ்தான் பரப்புரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Advertisement

அதானியின் பாக்கெட்டுகளில் பணத்தை நிரப்புகிறது பாஜக என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

ராஜஸ்தானில் சுரு பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, 'நாட்டில் கறுப்புப் பணம் ஒழிக்கப்படவில்லை என்றால் என்னை தூக்கிலிடுங்கள் என்று பிரதமர் மோடி கூறினார். கரோனா காலத்தில் ஆக்சிஜன், மருந்துகள் இல்லாமல் ஒருபக்கம் மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது, மொபைல் போனில் டார்ச் விளக்கை எரிய விடும்படியும் பாத்திரங்களை தட்டும்படியும் கூறினார்.

ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு மக்களுக்குத் தேவையான உணவு, மருந்துகளை வழங்கி வந்தது. இதனால் நோயாளிகள் மீண்டு வந்தனர். ஏனெனில் காங்கிரஸ் அரசு ஏழைகளுக்கான அரசு. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களுக்காக நாங்கள் ஆட்சி நடத்துகிறோம். நாங்கள் ஏழைகளை பாதுகாக்கிறோம். ஆனால் அவர்கள்(பாஜக) ஜிஎஸ்டியை கொண்டு வந்து முதல்முறையாக விவசாயிகளை வரி கட்ட வைத்தார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து சிறு வியாபாரிகளை முடக்கினார்கள்

காங்கிரஸின் பணி என்பது ஏழைகளின் பைகளில் பணத்தை நிரப்புவது. ஆனால் அவர்கள் அதானியின் பைகளில் பணத்தை நிரப்புகிறார்கள். அதானியின் வணிகத்துக்கு உதவுகிறார்கள். அவர் மேலும் மேலும் பணம் சம்பாதிக்கவும் அந்த பணத்தை அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்யவும் உதவுகிறார்கள்' என்று பேசினார்.

மேலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் வரும் தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்து பாஜகவை துடைத்தெறியும் என்றும் தெரிவித்தார். ராஜஸ்தானில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement