For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது!” - பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

05:20 PM Feb 27, 2024 IST | Web Editor
“பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது ”    பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி
Advertisement

தமிழ்நாட்டில் பாஜக எப்போதும் ஆட்சியில் இருந்ததில்லை.  ஆனால் தமிழ்நாடு பாஜகவின் இதயத்தில் உள்ளது என திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கூறினார். 

Advertisement

‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  திறந்த வாகனத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு மாநாட்டு மேடைக்கு சென்றார் பிரதமர் மோடி,

அப்போது பிரதமர் மோடிக்கு 65 கிலோ எடைகொண்ட பிரமாண்ட மஞ்சள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும்,  தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்ததற்காக,  பிரதமர் நரேந்திர மோடிக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் செல்லமுத்து,  ஜல்லிக்கட்டு காளை நினைவு சின்னமாக வழங்கினார்.

இதனை அடுத்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உரையாற்றினர்.  இவர்களை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழகத்தில் கொங்கு மண்டலம் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழகம் என்றும் தேசியம் பக்கம் உள்ளதை இந்த கூட்டம் நிரூபித்து கொண்டிருக்கிறது.  தமிழகம் இந்தியாவின் முதல் மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.  2024 தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் புதிய சரித்திரம் படைக்க உள்ளது.  அதற்கு சான்றாக இன்றைய கூட்டம் உள்ளது.  வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய ஆதரவை கொடுத்துள்ளீர்கள்.  என் மண் என் மக்கள் பெயரே பாஜகவுடன் பிணைப்பை காட்டுகிறது.

நாடு தான் முதன்மை என்று பாஜக உள்ளது.  இந்த பகுதியில் பாஜகவிற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது.  அண்ணாமலை வெறும் யாத்திரை மட்டும் நடத்தவில்லை ,  அனைவருக்கும் அனைத்தும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு வீடாக கொண்டுசேர்த்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக எப்போதும் ஆட்சியில் இருந்ததில்லை.  ஆனால் தமிழ்நாடு பாஜகவின் இதயத்தில் உள்ளது.  தமிழக மக்கள் அதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.  மக்களிடம் பொய்யை சொல்லி அவர்கள் நாற்காலிகளை காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கபட நாடகம் இப்போது வெளியே வந்துவிட்டது. அவர்கள் செய்த ஊழலும் கூட அதனால் தான் தமிழகத்தில் பாஜகவின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.

காஷ்மீரின் 370 சட்டம் ரத்து செய்ய வேண்டும் என்ற 2 கனவு இருந்தது.  இப்போது நிரந்தரமாக அங்கு தேசிய கொடி பறக்கின்றது.

காங்கிரஸ் ஆட்சி தமிழகத்திற்கு எவ்வளவு கொடுத்ததோ அதை விட 3 மடங்கு அதிகமாக வளர்ச்சிக்காக கொடுத்துள்ளோம்.  காங்கிரஸ் திமுக கூட்டணி எந்த வளர்ச்சி திட்டத்திலும் பங்கெடுக்கவில்லை. தமிழகத்தில் 3.5 லட்சம் குடும்பத்திற்கு இலவச அரிசி மற்றும் 6 லட்சம் அதிகமான வீடு கட்டி கொடுத்துள்ளோம். மோடி உத்தரவாதம் என்பது ஒரு சிலருக்கு அல்ல அனைவருக்குமானது.

தமிழகத்திற்கு வந்தவுடன் எம்.ஜி.ஆர் நினைவுக்கு வந்தார். அவர் பணி செய்த மண்ணில் இருப்பது மகிழ்ச்சி.  அவர் எழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார்.  அவர் குடும்ப ஆட்சி செய்யவில்லை.  அவருக்கு பிறகு தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே.  அதனால் தான் திமுக எம்.ஜி.ஆரை இழிவு செய்து ஆட்சி செய்து வருகிறது.

ஜெயலலிதாவின் பிறந்த நாள் சமீபத்தில் முடிந்தது .  இந்நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.  எம் ஜி.ஆர் கொள்கைகளை பின்பற்றி ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. நாட்டின் வளர்ச்சி என்பது தமிழகத்தின் வளர்ச்சியும் கருத்தில் கொண்டு தான்,  அதுதான் மோடி உத்தரவாதம்.  ராணுவ தளவாட உற்பத்தி நிலையம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தியா கூட்டணி தமிழகத்தை கைப்பற்ற முயல்கிறார்கள்.  அவர்கள் கைப்பற்றிவிட்டால் வளர்ச்சி இருக்காது.  பாதுகாப்பு துறையில் லஞ்சம் பெற்ற காங்கிரஸ் வளர்ச்சியை தருமா? ஜவுளி தொழிலுக்கு ஜவுளி பூங்கா திட்டத்தை அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் கோடிகணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறவுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி செய்தால் இது சாத்தியமாகுமா? புதிய பாரதம் உருவாக்கும் முயற்சியில் உள்ளோம்.  இதை அவதுறு பரப்பி இந்தியா கூட்டணியினர் பொய் பரப்புரை செய்து வருகின்றனர்.  தமிழ்நாடு போல பிற மாநிலங்களில் கொள்ளை அடிப்பதற்காக கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர்.  அவர்களது கடைகளை முட வேண்டிய நேரமிது.

மத்தியில் INDIA கூட்டணி உருவாகியுள்ளது.  டெல்லியில் அதன் கூட்டணி வெற்றி பெறாது. தமிழகத்தில் கொள்ளையடிக்க கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.  அதற்கு முற்றுப்புள்ளி வைக்க என் மன் என் மக்கள் யாத்திரை நடத்தப்பட்டது.  3-வது முறையாக பாஜக வெற்றி பெற நாம் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Tags :
Advertisement