"பாஜக பூத் கமிட்டி மாநாடு"- மறக்காதே பூத்தினை மறக்காதே என்று நெட் பாடல் பாடிய நயினார் நாகேந்திரன்!
தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு இன்று திருநெல்வேலியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டுள்ளார். மேலும் பல்வேறு பாஜக தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநாட்டில் பேசினார். அவர் பேசியது,
”தமிழ் நாட்டில், 10 வயது பெண்கள் முதல் 70 வயது பெரியவர்கள் வரை ரோட்டில் நடமாட முடியவில்லை. கரூரில் விஏஓ தாக்கப்பட்டுள்ளார். 21 லாக்கப் டெத் நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சி குடும்ப ஆட்சி. பாஜக ஆட்சி அது மக்களுக்கான ஆட்சி. மக்களிடம் கேட்டால் திமுக ஆட்சியை ஒரு பேரழிவின் ஆட்சி எனக் குறிப்பிடுகிறார்கள்.1999 பாஜகவுடன் நீங்கள் கூட்டணி வைத்தது சந்தர்ப்பவாத கூட்டணியா..?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”2026 தேர்தல் அமித்ஷா அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் தேர்தலாக இருக்கும். இந்த தேர்தல் நீதிக்கும் அதர்மத்திற்கும் ஆன தேர்தல். அதில் நீதி வென்றாக வேண்டும். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று சந்தேகமும் இல்லை. சிபி ராதாகிருஷ்ணனுக்கு பாஜக துணை ஜனாதிபதி பதவி கொடுத்துள்ளது. திமுகவினர் 2021 தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார்கள்.ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஸ்டாலின் அவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது வழக்கம். தேர்தல் முடிந்தவுடன் அதை மறப்பது அவரது பழக்கம். இப்படித்தான் தமிழ்நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து அவர், திருடாதே தம்பி திருடாதே என்ற எம்ஜிஆரின் பாடலை மறக்காதே பூத்தினை மறக்காதே என்று நெட் பாடல் ஆக மாற்றி மேடையில் பாடி அசத்தினர்.