"234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்று பெறும்" - நடிகர் சரத்குமார் பேட்டி!
விழுப்புரம் அடுத்த பேரங்கியூர் பகுதியில் கட்சியினரின் புதிய இல்லம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
"மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைப்பது மட்டுமே திமுக அரசின் செயல்பாடாக உள்ளது. எப்போதும் நிதி வரவில்லை என கூறி வருகிறார்கள் மத்திய அரசின் நிதி உதவியாளர் பால வளர்ச்சிகள் நடந்துள்ளது. மத்திய அரசுடன் சுமூகமான உறவை வைத்துக் கொண்டால் மேலும் தமிழகம் வளர ஏதுவாக இருக்கும்.
தமிழ்நாட்டில் பெரிய கலவரங்கள் ஏதும் நடக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆம்ஸ்ட்ராங் உள்பட பல கொலைகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் சிறந்த காவல்துறை உள்ளது. இருந்தாலும் கொலைகள் நடப்பதை தடுப்பது எப்படி என சிந்தித்துப் பார்க்க வேண்டும். சமூகம் மாறிவிட்டதா என்றும் சிந்திக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் மாநில தலைவர் இல்லை. கூட்டணி குறித்து மாநில தலைமை தொடர்ந்து பேசி வருகிறது. இன்றைய அமித்ஷா கூட்டம் நிறைவுக்கு பிறகு சென்னையில் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பலரின் கருத்துக்கள் கேட்கப்படும் அதன் பிறகு நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
மறந்துவிட்ட ஒன்று மீண்டும் சொல்லும் போது அதனை தீவிரம் என சொல்லக்கூடாது. பெரும்பான்மையான இந்துக்கள் உள்ள நாடாக இருந்தாலும் கூட அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். சிலவற்றை மறந்து விட்டோம் என அவற்றை நினைவு கூறுவது எப்படி தவறாகும். இதனை சிலர் பாசிசம் என கூறுகிறார்கள்.
திமுக 200தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுகிறார்களா இல்லையா என்பதை தேர்தலுக்கு பிறகு தான் பார்க்க வேண்டும். 234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்று பெறும் என நான் கூறுகிறேன். 2026 தேர்தல் போட்டியிடுவதா, இல்லையா என்பதை தலைமை கட்சி தலைமை முடிவு செய்யும்.
திரையுலக நிகழ்ச்சியில் கமல் ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை. தமிழ் மூத்த மொழி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தமிழில் இருந்துதான் கன்னடம் வந்தது என்பதற்கு கமலிடம் ஆதாரம் இருக்கிறதா என தெரியவில்லை. அந்தக் கருத்தை இப்ப பதிவு செய்வதற்கான காரணம் புரியவில்லை. இந்த சர்ச்சைகளின் மூலம் என்ன பயன் அடையப்போகிறோம் என தெரியவில்லை.
கர்நாடகத்திற்கும் தமிழகத்தின் இடையே பிரச்சனை உருவாக்கும் விதமாக கமல் பேச்சு அமைந்துவிட்டது. கமலஹாசன் சொன்னது உண்மை என சீமானை தவிர வேறு யாரும் கூறவில்லை. செம்மொழி என்ற அந்தஸ்துகளை பெற்ற பிறகு தமிழில் இருந்து கன்னடம் வந்தது என கூறுவது ஏன் என தெரியவில்லை. தமிழில் தான் கன்னடம் வந்தது என ஆராய்ச்சியாளர்கள் தான் சொல்ல வேண்டும். கமல் படம் ஓடுவதற்காக அப்படி சொன்னாரா எனக்கு தெரியவில்லை.
பாஜக கூட்டணியில் தேமுதிக பாமக இணைவது குறித்து தலைமை முடிவு செய்யும். பாமக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்பாவுக்கும், மகனுக்கும் உள்ள பிரச்சனை சுமூகமாக முடிய வேண்டும். கருத்து வேறுபாடுகளை விரைவில் கலைவது அந்த இயக்கத்துக்கு நல்லது. பாமக யாருடன் கூட்டணி என்பதெல்லாம் அடுத்த கட்டம். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி மிக சிறப்பாக உள்ளது தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. பாஜகவில் என்னோட பயணம் சிறப்பாக உள்ளது.10.5% இட ஒதுக்கீடுக்கு மிகப்பெரிய சட்டம் கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசு செயல்படுத்தி சொல்ல வேண்டிய கருத்து சரத்குமார் சொல்லக்கூடாது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் கமல்ஹாசன் போல் நான் கருத்து சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.