For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகார் சிறப்பு திருத்தம் - 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
09:55 AM Aug 02, 2025 IST | Web Editor
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் சிறப்பு திருத்தம்   65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
Advertisement

பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டபேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே கடந்த ஜுன் 24 அன்று இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்கு எதிர் கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சிறப்புத் தீவிர திருத்த பணிக்கு பின்னர் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 லட்சம் பேர் உயிரிழப்பும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருந்ததாகவும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பமே தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக, 35 லட்சம் பேர் பிகாரில் இருந்து நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவில் தான் வேலைக்கு வந்து தங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பிகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அவர்கள், தமிழ்நாட்டில் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement