பீகார் சட்டமன்ற தேர்தல் | பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவு!
பீகார் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 121 சட்டமன்ற தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர். வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வரும் நிலையில் காலை 9 மணி வரை 121 சட்டமன்ற தொகுதிகளில் 13.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி, பீகாரில் 27.65 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மதியம் 1 மணி நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பீகார் மாநிலத்தில் 121 சட்டமன்றத் தொகுதிக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும 11ம் தேதியும், 14ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை தேர்தல் முடிவுகள் வெளியாகும்.