For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மினிமம் பேலன்ஸ் இல்லை என ரூ.8500 கோடி வசூலித்த வங்கிகள் - ராகுல் காந்தி கண்டனம்!

03:14 PM Jul 30, 2024 IST | Web Editor
மினிமம் பேலன்ஸ் இல்லை என ரூ 8500 கோடி வசூலித்த வங்கிகள்   ராகுல் காந்தி கண்டனம்
Advertisement

பொதுத் துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,495 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement

2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ.2331 கோடி என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி மக்களவையில் தெரிவித்துள்ளார். இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட 25% அதிகமாகும்.

அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி பயனர்களிடமிருந்து ரூ.633 கோடியும், பேங்க் ஆப் பரோடா பயனர்களிடமிருந்து ரூ.386 கோடியும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்துள்ளன. மினிமம் பேலன்ஸ் தொகையானது வங்கிக்கு வங்கி, இடங்களை பொறுத்து மாறுபடும். மொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காட்டமாக தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகின்றன. தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு, 'மினிமம் பேலன்ஸ் இல்லை' எனக் கூறி ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதமாக வசூல் செய்துள்ளது.

மக்களின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சியாக மோடியின் சக்கர வியூகத்தில் திறக்கப்பட்ட கதவுதான் இந்த அபராத நடைமுறை. இந்திய மக்கள் அபிமன்யூக்கள் அல்ல, அர்ஜுனர்கள் என புரிந்துகொள்ளுங்கள். சக்கர வியூகத்தை உடைத்து உங்களது எல்லா அட்டூழியங்களுக்கும் எப்படி பதில் தர வேண்டும் என மக்களுக்கு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement