Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பாஜகவின் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும்” - மல்லிகார்ஜுன கார்கே!

09:31 PM Mar 15, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் பத்திரம் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதுவரை வரையில் பாஜகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

“காங்கிரஸ் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பணம் வங்கிகளில் உள்ளது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைகளை எதிர்கொண்டவர்கள் பாஜகவுக்குச் சென்று பதவிகளைப் பெற்றுள்ளனர். மேலும் பாஜகவுக்கு சென்றவுடன் அவர்கள் சுத்தமாகி விடுகின்றனர்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் பாஜக கட்சிக்கு ஐந்து ஆண்டுகளில் ரூ.6,060 கோடி கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கணக்கு முடக்கப்பட்டால், அவர்கள் எப்படி தேர்தலில் போட்டியிடுவார்கள். தேர்தல் பத்திர முறைகேடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக எப்படி பணம் சம்பாதித்தது என்பதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும். தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
#News7tamilupdateBJPCongressElection commissionElectoral BondsMallikarjun KhargeNews7Tamil
Advertisement
Next Article