பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் நியமனம்! ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு என்ன பொறுப்பு தெரியுமா?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதோடு, படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வழக்கறிஞர் பொற்கொடிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வாங்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், புதிய தலைவரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி வழக்கறிஞர் ஆனந்தன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வழக்கறிஞர் பொற்கொடி, துணைத் தலைவராக இளமான் சேகர், பொருளாளராக கமலவேல் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வரும் ஆனந்தன், ஆம்ஸ்ட்ராங் தொடர்பான வழக்குகளில் வாதிட்டு வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக ஆனந்தன் போட்டியிட்டுள்ளார்.