Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - வழக்கறிஞர் கைது!

09:57 PM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிவா என்ற வழக்கறிஞர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் தப்ப முயன்றதாக கூறப்பட்ட நிலையில், என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பிறகு 10 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ் என மேலும் 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர். ரவுடி சம்போ செந்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச் சென்றதாக தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் வரும் ரவுடி சம்போ செந்திலுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று (ஜூலை 24) மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்த வைரமணி, ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்குப் பின்பு சொந்த ஊரான வீரநல்லூர் சென்று பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேயில் வைத்து வைரமணியை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே மாத்தூரைச் சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், சிவா உடன் சேர்த்து 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சிவா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags :
advocateArmstrongArrestBahujan Samaj PartyBSPNews7Tamilnews7TamilUpdatesTN Police
Advertisement
Next Article