கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளை காய்ச்சல்!
கேரளாவின் கண்ணூரை சேர்ந்த மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த மூன்றரை வயது சிறுவனுக்கு அமீபிக் மூளை காய்ச்சல் அறிகுறிகள் இருந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் புதுசேரியில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு நான்கு வயது சிறுவன் கோழிகோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் பரிசோதனை முடிவுகள் நாளை வரவுள்ளன.
கடந்த இரு மாதங்களில் இரு சிறுமிகளும், ஒரு சிறுவனும் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு பலியான நிலையில், மேலும் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்மை அமீபிக் மெனிங்கோ-என்செபாலிடிஸ் (பிஏஎம்), என்பது யூகாரியோட் நெக்லேரியா ஃபோலேரி மூலம் மூளையில் ஏற்படும் அபாயகரமான தொற்று ஆகும். இதற்கு மூளைக்காய்ச்சல் போன்ற தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.