Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Armstrong கொலை வழக்கு | துபாய் விரையும் தனிப்படை போலீஸ்... சிக்குவாரா சம்போ செந்தில்?

03:44 PM Oct 07, 2024 IST | Web Editor
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் துபாய் விரைகின்றனர்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, கடந்த ஜூலை 5-ஆம் தேதி சிலர் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர். அவரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் முன்விரோதம் மற்றும் பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, இந்த கொலைவழக்கில் 27 நபர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசாரால் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கையில் A1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் A2 குற்றவாளியாக தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்போ செந்தில் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சம்போ செந்தில் தலைமறைவாக இருந்த வரும் நிலையில் அவரை பிடிக்க சென்னை தனிப்படை போலீசார் துபாய் செல்ல உள்ளனர். சம்போ செந்தில் துபாயில் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் தனிப்படை போலீசார் விமானம் மூலமாக துபாய்க்கு செல்கின்றனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags :
ArmstrongBahujan Samaj PartyBSPCrimeDubainews7 tamilPoliceRowdy Sambo Senthil
Advertisement
Next Article