Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!

04:10 PM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ரௌடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு, அவர் கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத், அதே பகுதியைச் சேர்ந்த அருள், செல்வராஜ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கு குறித்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சிவசக்தி, கோகுல், விஜய் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மூவரையும் 19-ம் தேதி வரை சிறையிலடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு வீடியோ கான்பிரன்ஸ் மூலம்  நீதிபதி தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது இந்த வழக்கில் கைதான 11 பேருக்கும் 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி தயாளன் உத்தரவிட்டார்.

Tags :
ArmstrongArmstrong CaseBahujan Samaj PartyBSPChennaicourtPolicetamil nadu
Advertisement
Next Article