#ArmstrongMurderCase: தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி திருவேங்கடம் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி திருவேங்கடத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்க்க வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, மர்ம நபர்கள் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர்.
அவர்களில் திருவெங்கடம் என்ற குற்றவாளி தப்பிக்க முயற்சித்தாக கூறி போலீசார்
என்கவுன்ட்டரில் சுட்டு கொன்றனர்.
இதில் திமுக, அதிமுக,பாஜக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட முக்கிய கட்சியின் நிர்வாகிகள் என மொத்தமாக 20க்கும் மேற்பட்டார் கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் மற்றும் பகை காரணமாக ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்காக கூலிப்படைக்கு, பலரும் பணம் கொடுத்தது தெரியவந்தது. குறிப்பாக சிறையில் இருந்து இந்த கொலைக்கு பிரபல ரவுடி நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும், இதனை சம்போ செந்தில் செய்து முடித்தாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே சம்போ செந்திலை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், தொடர்ந்து தலைமைறவாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே மொட்டை கிருஷ்ணாவுடன் தொடர்பு கொண்டதாக பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : ரேசில் முந்தும் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம்!
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திருவேங்கடம் என்ற ரவுடி துபாயில் இருந்து இன்று(ஆக 23) அதிகாலை சென்னை வந்த போது விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து சென்னை செம்பியம் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற செம்பியம் காவல்துறையினர் திருவேங்கடத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.