ஆம்ஸ்ட்ராங் படுகொலை - ராகுல்காந்தி, கமல்ஹாசன் இரங்கல்!
பகுஜன் சமாஜ் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் எட்டு பேர் சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு விரைந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் என நம்புகிறேன். ஆம்ஸ்ட்ராங்-ஐ பிரந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கு ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடிகர் கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கமலஹாசன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை
செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்துள்ளனர். ஈடுபட்ட அவரது ஆதரவாளர்களை