For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் - எஸ்.பி.வேலுமணி!

02:18 PM Jun 06, 2024 IST | Web Editor
கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம்   எஸ் பி வேலுமணி
Advertisement

கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்துள்ளார்.  

Advertisement

கோயம்புத்தூரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது,

"கோவை மக்கள் ஒரு தீர்ப்பை அளித்துள்ளனர் அவர்களது தீர்பை அதிமுக வரவேற்கிறது. அதிமுகவை பொருத்தவரையில் பல தேர்தல்களைக் கண்ட இயக்கம்.  கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொண்ட போது பல்வேறு கட்சிகள் பாஜக உட்படக் கூட்டணியில் இருந்தது.  அப்போது அதிமுக வங்கிய வாக்கு சதவீதம் 19.35 சதவீதம் தான்.  இன்றைக்கு தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மட்டுமே கூட்டணி வைத்து 20.46 விழுக்காடு வாக்குகளை வாங்கியுள்ளோம்.

தேர்தல் அரசியலில் வெற்றி,  தோல்வி என்பது சகஜம், ஆனால் அண்ணாமலை கொஞ்சம் அதிகமாகவே பேசியுள்ளார்.  வாக்கு சதவீதம் ஏன் குறைந்தது என்பதை ஆய்வு செய்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.  அதனை விட்டு விட்டு 2-ஆம் கட்ட அதிமுக தலைவர்கள் அதிகமாக பேசினார்கள் என கூறுவது சரியல்ல.

இதற்கு முன் பாஜக  தலைவர்களாக தமிழிசை மற்றும் எல்.முருகன் போன்றவர்கள் இருந்தார்கள்.  ஆனால் அப்போது எல்லாம் எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது. அண்ணாமலை வந்த பிறகு தான் அண்ணா,  ஜெயலலிதா ஆகியோர் குறித்தும் கூட்டணியில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசினார்.  அதிமுக -பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு அண்ணாமலைதான் காரணம்.  அதே கூட்டணி தொடர்ந்து இருந்தால் 30 முதல் 35 சீட்கள் கிடைத்து இருக்கும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Tags :
Advertisement