"அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை" - ராமதாஸ் அதிரடி பேட்டி!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அரசு பள்ளிகளில் ஆங்கில திறனை வளர்க்க டெவலப் திட்டத்தினை தமிழக அரசு கொண்டுவந்துள்ளதை பாமக வரவேற்கிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இத்திட்டத்தினை விரிவு படுத்த வேண்டும்.
தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்திற்கு மேல் நெல் விவசாயம் செய்ய கூடும் என்பதால் உரத்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. உரதட்டுப்பாட்டினை போக்க விவசாயிகள் முன்னதாகவே உரம் வாங்கி குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
மழை காலம் துவங்க உள்ளதால் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் காரணமாக நெடுஞ்சாலை அனைத்துமே தனது அடையாளத்தினை இழந்து இருக்கிறது. குண்டும் குழியுமான சாலைகளை ஒட்டு வேலைகள் செய்யாமல் முழுமையான சாலைகள் அமைக்க வேண்டும்.
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இழப்பீடு வழங்க கோரி போராட்டம் செய்து வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு வழங்கபடும் இழப்பீட்டினை விட கூடுதலாக வழங்க வேண்டும்.
பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்கும் போது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி இழப்பீடு வழங்க பத்து லட்சம் உத்தரவிட்டும் ஆலை நிர்வாகம் வழங்காமல் உள்ளது. அந்த ஆலை நிர்வாகத்தின் பின்னால் உள்ள நபர் யார்?
இழப்பீடு வழங்ககோரி மக்கள் போராட்டம் செய்தபோது மாவட்ட எஸ்.பி எச்சரிக்கிறார். நகை திருட்டு புகாரில் அஜீத்குமார் கொலை செய்யபட்டதற்கு ஆழ்ந்த வருதத்தை தெரிவிப்பதோடு இழப்பீடாக ஒரு கோடி வழங்க வேண்டும். நிகிதா என்ற பெணின் ஒற்றை தொலைபேசிக்கு அதிகாரிகள் ஓடோடி வந்துள்ளார்கள், ஆனி வேர் எங்கிருக்கிறது அஜீத் குமார் கொல்லப்பட்ட விவகாரம் ஊருக்கே தெரிந்த பிறகு மாவட்ட போலீசுக்கு தெரிகிறது சட்டம் ஒழுங்கு தான் என்ன?
பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. தனக்கு தான் உள்ளது. கொரடாவை நீக்கும் அதிகாரம் ஜி.கே மணி மூலம் சபாநாயகருக்கு கொடுத்து சிபாரிசு செய்து தான் நீக்க வேண்டும். அன்புமணிக்கு நீக்கும் அதிகாரம் கிடையாது.
சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருக்கு நிர்வாக குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பதவிகளை வழங்க உள்ளதாகவும், மூன்று பேருக்கு அதிகாரம் உள்ளதாக அன்புமணி தெரிவிக்கும் சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை.
கூட்டணி குறித்து பாமக நிர்வாக குழு, செயற்குழு, பொதுக்குழு கருத்துகள் கேட்ட பின் தான் சொல்ல முடியும் அதுவரை வரும் தகவல் வதந்திதான் என்று தெரிவித்துள்ளார்.