“அமித் ஷாவும் எடப்பாடி பழனிச்சாமியும் முடிவெடுப்பார்கள்” - கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலத்தில் இன்று(ஏப்ரல்.16) பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அதன் பின்பு செய்தியார்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்தபோது, “உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி முடிவெடுப்பார்கள். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. உள்துறை அமைச்சர் தான் கூட்டணி குறித்து பேசி இருக்கிறார். அது பற்றி அவர்கள் தான் பேச வேண்டும்” என்றார் தொடர்ந்து அவர் பேசுகையில், “அண்ணா பல்கலைக்கழத்தில் இரவு 7 மணிக்கு மேல் சார் அழைக்கிறார் என்ற நிலை உள்ளது.
சட்டம் ஒழுங்கு முறையாக இல்லை. மக்களுக்கு எதிரான ஆட்சி வேண்டாம் என்ற தீர்மானத்தில் எங்கள் உள்துறை அமைச்சர் கூட்டணி அமைத்துள்ளார். மக்களுக்கு தேவையான பிரச்சினைகள் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம். இருப்பது 4 பேராக இருந்தாலும் மக்களுக்காக பேசுவோம். அண்ணாமலை புயலாக இருப்பார், நான் தென்றாலக இருப்பேன். ஓபிஎஸ் தினமும் என்னுடன் பேசி கொண்டுதான் உள்ளார். 2026 திமுக டெபாசிட் வாங்காது”
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.