அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை என்ற பெயரில் தனிப்படை காவலர்கள் 6 பேர் கோயிலுக்கு பின்புறம் வைத்து அஜித்குமாரை சரமாரியாக நடத்தினர். மேலும், அஜித்குமாரின் தம்பி நவீன்குமாரையும் போலீசார் தாக்கினர். போலீசார் தாக்கியதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதற்கிடையே, காவல்துறையினர் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அஜித்குமாரின் உடலில் 50 க்கும் அதிகமாக இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவரின் உடம்பில் சிகரெட்டால் சுட்டும், மிளகாய் பொடி கலந்த நீரை ஊற்றியும் சித்ரவதை செய்ததும் தெரியவந்தது.
இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமார் போலீசார் தாக்கியதில் கால் ஊன்ற சிரமமாக இருப்பதாக கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அஜீத்குமாரிடம் விசாரணை நடத்தியபோது, தன்னையும் போலீசார் விசாரணையின் போது போலீசார் தன்னையும் தாக்கியதாக நவீன் குமார் திருப்புவனம் காவலர்களிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார். தற்போது அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.