Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல் பணியை துவங்கியது அதிமுக: 4 குழுக்களை அமைத்து இபிஎஸ் உத்தரவு!

11:22 AM Jan 22, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் பணியை அதிமுக துவங்கியுள்ளது. அதன்படி  4 தேர்தல் குழுக்களை அமைத்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

பிரதமர் மோடி தலைமையிலான மக்களவையின் பதவிக் காலம் வரும் மே 21-ம் தேதியுடன் நிறைவடைகிறது.  இதனால்,  மக்களவைக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.  மக்களவைத் தேர்தல் தேதிகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்நிலையில், கட்சியின் கூட்டணிகள் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மற்றும்  கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு ஆகிய 3 குழுக்களை சமீபத்தில் திமுக தலைமை அறிவித்தது.

இந்த நிலையில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுவை அமைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 4 குழுக்களை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

1. தொகுதி பங்கீட்டுக் குழு :

2. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

3.தேர்தல் பிரச்சாரக் குழு 

4. தேர்தல் விளம்பரக் குழு

Tags :
2024 electionADMKAIADMKEdappaadi palanisamyElectionEPSgeneral election
Advertisement
Next Article