For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவை தேர்தல் பணியை துவங்கியது அதிமுக: 4 குழுக்களை அமைத்து இபிஎஸ் உத்தரவு!

11:22 AM Jan 22, 2024 IST | Web Editor
மக்களவை தேர்தல் பணியை துவங்கியது அதிமுக  4 குழுக்களை அமைத்து இபிஎஸ் உத்தரவு
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் பணியை அதிமுக துவங்கியுள்ளது. அதன்படி  4 தேர்தல் குழுக்களை அமைத்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

பிரதமர் மோடி தலைமையிலான மக்களவையின் பதவிக் காலம் வரும் மே 21-ம் தேதியுடன் நிறைவடைகிறது.  இதனால்,  மக்களவைக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.  மக்களவைத் தேர்தல் தேதிகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்நிலையில், கட்சியின் கூட்டணிகள் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மற்றும்  கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு ஆகிய 3 குழுக்களை சமீபத்தில் திமுக தலைமை அறிவித்தது.

இந்த நிலையில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுவை அமைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 4 குழுக்களை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

1. தொகுதி பங்கீட்டுக் குழு :

  • கே.பி. முனுசாமி, M.L.A.,  அதிமுக துணைப் பொதுச் செயலாளர்
  •  திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A.,  பொருளாளர்
  •  பி. தங்கமணி,  M.L.A.,  அமைப்புச் செயலாளர்
  • S.P. வேலுமணி,  M.L.A.,  தலைமை நிலையச் செயலாளர்
  • பா. பென்ஜமின்,  அமைப்புச் செயலாளர்

2. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

  • நத்தம் இரா. விசுவநாதன், M.L.A.,  துணைப் பொதுச் செயலாளர்
  • பொன்னையன் , அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
  •  பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A.,  தேர்தல் பிரிவுச் செயலாளர்
  • ஜெயக்குமார்,  அமைப்புச் செயலாளர்
  • சி.வி.சண்முகம், M.P.,  அமைப்புச் செயலாளர்
  • செ. செம்மலை ,  அமைப்புச் செயலாளர்
  • பா. வளர்மதி,  மகளிர் அணிச் செயலாளர்
  • ஓ.எஸ். மணியன், M.L.A.,  அமைப்புச் செயலாளர்
  • ஆர்.பி. உதயகுமார், M.L.A.,  புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்
  • முனைவர் வைகைச்செல்வன்,  இலக்கிய அணிச் செயலாளர்

Image3.தேர்தல் பிரச்சாரக் குழு 

  • தம்பிதுரை, M.P.,  கொள்கை பரப்புச் செயலாளர்
  • செங்கோட்டையன், M.L.A.,  அமைப்புச் செயலாளர்
  • தளவாய்சுந்தரம், M.L.A.,  அமைப்புச் செயலாளர்
  • செல்லூர் ராஜூ, M.L.A.,  அமைப்புச் செயலாளர்
  • தனபால், M.L.A.,  அமைப்புச் செயலாளர்
  •  K.P. அன்பழகன், M.L.A.,  அமைப்புச் செயலாளர்
  • ஆர்.காமராஜ், M.L.A.,  அமைப்புச் செயலாளர்
  • கோகுல இந்திரா,  அமைப்புச் செயலாளர்
  • உடுமலை K.ராதாகிருஷ்ணன், M.L.A.,  அமைப்புச் செயலாளர்
  • N.R. சிவபதி,  எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

4. தேர்தல் விளம்பரக் குழு

  • சி. விஜயபாஸ்கர், M.L.A.,  அமைப்புச் செயலாளர்
  • கடம்பூர் ராஜூ, M.L.A.,  அமைப்புச் செயலாளர்
  • கே.டி,ராஜேந்திரபாலாஜி,  அமைப்புச் செயலாளர்
  • அக்ரி S.S. கிருஷ்ணமூர்த்தி, M.L.A.,  விவசாயப் பிரிவுச் செயலாளர்
  • பி. வேணுகோபால்,  மருத்துவ அணிச் செயலாளர்
  • பரமசிவம்,  இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
  • இன்பதுரை,  வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
  • அப்துல் ரஹீம்,  சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்,
  • ராஜ் சத்யன்,   தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்
  • ராஜலெட்சுமி ,  மகளிர் அணி துணைச் செயலாளர்
Tags :
Advertisement