For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

07:09 PM Jul 12, 2024 IST | Web Editor
அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Advertisement

அதிமுக சார்பில் நேற்று முன்தினம் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், 17.7.2024 அன்று நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து, நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டங்கள் முதற்கட்டமாக நேற்று முன்தினம் (ஜூலை 10) முதல் 19.7.2024 வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி நடைபெற்று வருகின்றன.

இதில், 17.7.2024 அன்று நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
Advertisement