Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜகவில் இணைந்த அதிமுக மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள்!

02:00 PM Feb 07, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேரும், முன்னாள் எம்பி ஒருவரும் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தனர்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.  தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. இதனிடையே, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தங்களின் கூட்டணிக்கு இழுப்பதற்கான பேச்சுவார்த்தையை அதிமுகவும், பாஜகவும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில்,  டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர்கள் எல்.முருகன், ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏக்கள், தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் மற்றும் திமுகவின் முன்னாள் எம்பி ஒருவர் அக்கட்சியில் இணைந்தனர்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் (வலங்கைமான்),  முன்னாள் எம்எல்ஏக்கள் கே.வடிவேலு (கரூர்), சேலஞ்சர் துரைசாமி (கோவை),  பி.எஸ்.கந்தசாமி (அரவக்குறிச்சி),  எம்.வி.ரத்தினம் (பொள்ளாச்சி),  ஆர்.சின்னசாமி (சிங்காநல்லூர்), ஆர்.தங்கராஜ் (ஆண்டிமடம்),  வி.ஆர்.ஜெயராமன் (தேனி), எஸ்.எம்.வாசன் (வேடசந்தூர்), பி.எஸ்.அருள் (புருவனகிரி),  ஆர்.ராஜேந்திரன் (காட்டுமன்னார்கோவில்),  ஏ.ஏ.கருப்புசாமி (அவிநாசி),  எஸ்.குருநாதன் (பாளையம்கோட்டை), செல்வி முருகேசன் (காங்கேயம்), ஏ.ரோகினி (கொளத்தூர்) உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். மேலும், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ தமிழழகன் (திட்டக்குடி) மற்றும் திமுக முன்னாள் எம்பி குழந்தைவேலு  (சிதம்பரம்) ஆகியோரும் பாஜகவின் இணைந்தனர்.

Tags :
#MMKADMKBJPCongresscpimDMDKDMKElection2024IndiaMDMKMK StalinMNMndaNews7Tamilnews7TamilUpdatesNTKPMKSeemanVCK
Advertisement
Next Article