அகமதாபாத் விமான விபத்து – உயிர் பிழைத்த விஸ்வாஷ் குமார் ரமேஷின் புதிய வீடியோ!
அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் சில நிமிடங்களிலேயே பிஜே மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்தனர். அதே சமயம், விமான விபத்தில் விடுதியில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். இதன்மூலம், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது. இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் திமுக குறித்த கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
இதனால் உடல்களை அடையாளம் காண விமான உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 76 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மற்றவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த விபத்தில் உயிர்பிழைத்த விஸ்வாஸ் குமார் ரமேஷின் புகைப்படங்களும், அவர் விபத்தில் இருந்து தப்பி நடந்து வருவது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகிறது.
અવિશ્વસનીય પરંતુ સત્ય!
અમદાવાદ પ્લેન ક્રેશમાં ચમત્કારિક રીતે બચેલા રમેશ વિશ્વાસનો વધુ એક વિડિઓ સામે આવ્યો.
દુર્ઘટના થયા પછી હાથમાં ફોન સાથે ચાલીને બહાર નીકળ્યો રમેશ વિશ્વાસ. #AhmedabadPlaneCrash pic.twitter.com/94WDepkKjn
— Sagar Patoliya (@kathiyawadiii) June 16, 2025
இந்த நிலையில், விஸ்வாஸ் குமார் ரமேஷின் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. செல்போன் போன்ற ஒன்றை கையில் வைத்துக்கொண்டு வெள்ளை நிற டி ஷார்ட் உடன் ரமேஷ், விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து காயங்களுடன் நடந்து வருகிறார். அவரை அங்கிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். இந்த புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 11A- இருக்கையில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் பயணம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.