வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை!
தமிழ்நாடு சட்டப்பேரவை 2025-26-ம் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நேற்று (மார்ச் 14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை இன்று (மார்ச் 15) தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இதனிடையே சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.