நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
09:15 AM Dec 12, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ் திரை உலகில் 50 ஆண்டுகளாக ஒரு சகாப்தமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினி தனது 75-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதற்காக பல்வேறு தரப்பினர் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.