ஐயப்ப பக்தர்கள் சென்ற வேனும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற வேனும் - ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
09:03 AM Dec 12, 2025 IST | Web Editor
Advertisement
கேரள மாநிலம் அஞ்சல் - புனலூர் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவிலிருந்து சபரிமலை நோக்கி ஐயப்ப பக்தர்கள் வேனில் சென்றுள்ளனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் அஞ்சல் நோக்கி வந்த ஆட்டோ வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
Advertisement
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் அக்ஷய் மற்றும் பள்ளி சிறுமி ஸ்மிருதி, அவரது உறவினர் ஜோதி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புனலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.