ஆவின் நிர்வாகம் அதள பாதாளத்தில் உள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு.!
தமிழ்நாடு அரசு நடத்தி வரும் ஆவின் நிர்வாகம் அகல பாதாளத்தில் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”தமிழ்நாடு அரசு நடத்தி வரும் ஆவின் நிர்வாகம் அகல பாதாளத்தில் உள்ளது. ஆவின் நிர்வாகத்தில் ஊழல் நடக்கிறது என்பதை நிரூபிக்க பாஜக வின் 5 பேர் கொண்ட குழுவை ஆவின் தொழிற்சாலைக்குள் அனுப்ப தயாரா..?
எனது நோக்கம் அரசியலை மாற்ற வேண்டும் என்பது தான். ஆளுநர் நிதி மசோதாவுக்கு கையெழுத்து போடவில்லை என்றால் தான் தமிழகத்தின் பொருளாதாரம் முடிங்கி விடும். மற்றபடி சில மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதில் என்ன தவறு.
பாஜக வினர் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. அப்படி ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம். 1000 கும்பாபிஷேகம் செய்ததாக தமிழ்நாடு அரசு சொல்கிறது. இதில் திமுக பங்கு என்ன? நான் அனைத்து சாதியையும் சமமாக பார்க்கிறேன். ஆனால் புகைப்படதுக்காக அரசியல் செய்வது திமுகதான்.
பாஜகவை பொறுத்தவரை கோயில் பணம் அந்த கோயில் சார்ந்து தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் ஒரு அரசு கல்லூரி அல்லது பள்ளி நடத்த வேண்டும். அந்த பகுதியில் உள்ள அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம்.” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.