For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜக தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்!

03:09 PM May 19, 2024 IST | Web Editor
பாஜக தலைமை அலுவலக முற்றுகை போராட்டம்   டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Advertisement

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமார் நேற்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்தது. இதனையடுத்து இதுகுறித்து கெஜ்ரிவால் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில், “நான் உள்பட மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரையும் சிறையில் அடைத்தனர். தற்போது எனது உதவியாளரையும் சிறையில் அடைத்துள்ளனர். இப்போது ராகவ் சதா, அதிஷி, சௌரப் பரத்வாஜ் ஆகியோரை சிறையில் அடைப்போம் என்று கூறுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சியினர் அத்தனை பேரையும் சிறையில் தள்ள முயற்சிக்கிறார் மோடி” என தெரிவித்தார்.

அவருடைய இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில் பாஜக தலைமை அலுவலகம் நோக்கி இன்று ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர். இதனை கெஜ்ரிவால் அறிவித்தார். ஆனால், முற்றுகை போரட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள் : இந்திய மெட்ரோ ரயில் என மேற்கு வங்க பாஜக பரப்பிய படங்கள் பொய் - உண்மை என்ன?

இதனால், பாஜக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஆம் ஆத்மியின் எம்.பி. ராகவ் சத்தா மற்றும் டெல்லி அமைச்சர்களான அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோரையும் சிறைக்கு அனுப்பி விடுவோம் என பாஜக-வினர் கூறி வருகின்றனர் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டியுள்ளார். இந்நிலையில், தடையை மீறி ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

Tags :
Advertisement