”மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்” - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி...!
கபடி வீராங்கனை கார்த்திகாவை அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
05:36 PM Oct 28, 2025 IST | Web Editor
Advertisement
பஹ்ரைனில் மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் கபடி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கார்த்திகா மற்றும் அபினேஷ் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்தியதுடன் தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”ஆசிய இளையோர் கபடி போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய வீராங்கனை, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்தேன். எளிய பின்னணியில் இருந்து தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் கபடி விளையாட்டில் ஜொலித்து வரும் கார்த்திகா, மென்மேலும் பல வெற்றிகளைக் குவித்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பெருமைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement