For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

11:19 AM Feb 24, 2024 IST | Jeni
டெல்லியில் ஆம் ஆத்மி   காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு   இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
Advertisement

டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் இரண்டு கட்சிகளும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பின்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லியை பொருத்தவரை ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதுடெல்லி, தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களும், சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி மற்றும் வடமேற்கு டெல்லி ஆகிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள் : இஸ்லாமிய திருமணம், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்

தொடக்கத்தில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 பொதுத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement