For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பட்டப்பகலில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை... பீகாரில் அதிர்ச்சி!

பீகாரில் பட்டப்பகலில் நகைக் கடையில் சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
09:22 PM Mar 10, 2025 IST | Web Editor
பட்டப்பகலில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை    பீகாரில் அதிர்ச்சி
Advertisement

பீகார் மாநிலம் அர்ரா என்ற பகுதியில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடை இன்று வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு திடீரென 6க்கும் மேற்பட்டகொள்ளையர்கள் கையில் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்தனர். துப்பாக்கிகளுடன் புகுந்த கொள்ளையர்களை பார்த்ததும் வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

Advertisement

இதையும் படியுங்கள் : ‘சக்தித் திருமகன்’ படத்தின் டீசர் எப்போது? வெளியான அப்டேட்!

கொள்ளையர்கள், ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகைக்கடையில் ரூ.25 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொள்ளையர்களை விரட்டி சென்றனர். அப்போது போலீசார் கொள்ளையர்களில் 2 பேரை கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து நகைகள், இருசக்கர வாகனங்கள், 10 தோட்டாக்கள், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய 4 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நகைக் கடையில் சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement