"4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை" - #EPS கண்டனம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைப்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்த பள்ளியின் தாளாளாரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடன் தெரிவித்தார். இதனைதொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே அந்த தனியார் பள்ளியை சூழ்ந்த உறவினர்கள், பொதுமக்கள் பள்ளியை சூறையாடினர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த நிலையில், 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது; இது கடும் கண்டனத்திற்குரியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில்,
4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த… pic.twitter.com/HksAeEoWat
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) February 7, 2025
ஒரு 4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள். உங்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது திமுக ஆட்சி? மேலும் அதே பள்ளியில் பயிலும் மற்றுமொரு மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் , அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் செய்திகள் வருகிறது.
எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டும்தான் இக்குற்றச்சாட்டில் தொடர்பு உள்ளவர்களா? மற்றும் வேறு பலர் உள்ளார்களா என முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ள அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.