56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - 3 தமிழ் படங்கள் தேர்வு...!
இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. கோவா சர்வதேச திரைப்பட விழா என்றும் அழைக்கப்படும் இந்த நிகழ்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் இந்திய மற்றும் உலக நாடுகளில் இருந்து வரும் திரைப்படங்கள் திரையிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய பனாரமாவின் கீழ் திரையிட தமிழகத்தில் இருந்து 2 திரைப்படங்கள் மற்றும் ஒரு குறும்படம் ஆகியவை தேர்வாகியுள்ளன.
அதன்படி அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியான ’அமரன்’, நடிகர் அப்புக் குட்டியின் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' மற்றும் இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள 'ஆநிரை' என்ற குறும்படம் ஆகியவை தேர்வாகியுள்ளது.