For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 25 உத்தரவாதங்கள்: வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள்!

12:38 PM Apr 05, 2024 IST | Web Editor
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 25 உத்தரவாதங்கள்  வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள்
Advertisement

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தியுள்ளது.

Advertisement

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.  டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி,  கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும்,  தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

“காலத்தை கை வெல்லும்” என்ற  லட்சினையுடன் நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  48 பக்கங்கள் கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முகப்பில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் புன்னகையுடன் கை அசைக்கும் படம் இடம் பெற்றுள்ளது.  அதன் கீழ் பகுதியில்,  பொதுமக்கள் மத்தியில் ராகுல்காந்தி நடைபயணமாக சென்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.  இந்த தேர்தல் அறிக்கையில்,  விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இளைஞர்களுக்காக...

  1. வேலை உறுதி - ஒவ்வொரு படித்த இளைஞருக்கும் ரூ. 1 லட்சம் தொழிற்பயிற்சி பெற உரிமை உண்டு.
  2.  ஆட்சேர்ப்பு அறக்கட்டளை - 30 லட்சம் அரசு வேலைகள், அனைத்து காலி பணியிடங்களும்  நிரப்பப்படும்.
  3. அரசு ஆட்சேர்ப்பு செயல்முறையை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள்
  4. தொழிலாளர் பாதுகாப்பு - சிறந்த பணி விதிகள் மற்றும் கிக் தொழிலாளர்களுக்கான முழுமையான சமூகப் பாதுகாப்பு.
  5.  யுவ ரோஷ்னி - இளைஞர் நரி நியாயாவிற்கு ரூ 5,000 கோடி

பெண்களுக்காக...

  1.  மகாலட்சுமி திட்டம்:  ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலும் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம் நிதியுதவி
  2.  மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்புகளில் 50% பெண்களுக்கு இடஒதுக்கீடு
  3.  ஆஷா, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அதிக சம்பளம்; அரசாங்க பங்களிப்பை இரட்டிப்பாக்குதல்
  4.  ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண்களுக்கு சட்ட உரிமைகள் மற்றும் அரசாங்க திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உரிமை
  5.  சாவித்திரி பாய் புலே விடுதி - பணிபுரியும் பெண்களுக்கான இரட்டை விடுதி ஏற்படுத்தித் தரப்படும்

விவசாயிகளுக்காக ....

  1.  விளை பொருட்களுக்கு  சரியான விலை கிடைக்க MSP இன் சட்ட உத்தரவாதம்
  2.  விவசாயிகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
  3.  பயிர் இழப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் கணக்கிற்கு நேரடியாக பணம் பரிமாற்றம்
  4.  விவசாயிகளின் ஆலோசனையுடன் புதிய இறக்குமதி-ஏற்றுமதி கொள்கை அறிமுகப்படுத்தப்படும்
  5. ஜிஎஸ்டி இல்லாத விவசாயம் - விவசாயம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் ஜிஎஸ்டி நீக்கம்

தொழிலாளர்களுக்காக...

  1. உழைப்புக்கு மரியாதை - குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ 400,
  2. அனைவருக்கும் சுகாதார உரிமைகள் - ரூ. 25 லட்சம் சுகாதார காப்பீடு:  இலவச சிகிச்சை, மருத்துவமனை, மருத்துவர், மருந்து, பரிசோதனை, அறுவை சிகிச்சை
  3.  ⁠நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம் - MNREGA போன்ற புதிய திட்டம் நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
  4.  சமூக பாதுகாப்பு - வாழ்க்கை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான விபத்து காப்பீடு
  5.  பாதுகாப்பான வேலைவாய்ப்பு - ஒப்பந்த முறை ஊதியங்கள் வரையறை செய்யப்படும்

சமூகநீதி

  1.  சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்திற்காக ஒவ்வொரு நபரையும்,  ஒவ்வொரு வகுப்பினரையும் கணக்கிடும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
  2. எஸ்சி, எஸ்டி/ஓபிசிக்கான இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படும்
  3. எஸ்சி/எஸ்டி மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
  4. குத்தகை வன உரிமைச் சட்டத்தின் கீழ், தண்ணீர், காடு மற்றும் நிலத்திற்கான சட்டப்பூர்வ உரிமை
  5. அப்னா தர்தி,  அப்னா ராஜ் - எஸ்டி மக்கள் அதிகமாக வசிக்கும் இடத்தில் வளர்ச்சித் திட்டங்கள்

இது போன்ற ஏராளமான அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

Tags :
Advertisement