For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

4 மாநில தேர்தல் வெற்றி நிலவரம்! காங்கிரஸும் பாஜகவும் பெற்றது என்ன? தோற்றது என்ன?

10:43 PM Dec 03, 2023 IST | Web Editor
4 மாநில தேர்தல் வெற்றி நிலவரம்  காங்கிரஸும் பாஜகவும் பெற்றது என்ன  தோற்றது என்ன
Advertisement

தெலங்கானாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.

மத்திய பிரதேசத்தில், ஆட்சியை தக்கவைக்கும் முனைப்புடன் பாஜகவும், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரசும் தீவிரமாக களமிறங்கின. மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது. இதன்படி, மத்திய பிரதேசத்தில் பாஜக 164 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே போட்டி நிலவியது. இந்நிலையில், அங்கு 100க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கிறது. ராஜஸ்தானில் பாஜக 115 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளை வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் மற்ற கட்சிகள் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சி அமைக்கிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றிபெறும் என கணிக்கப்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிப்பெற்று பாஜக வெற்றிவாகை சூடியுள்ளது. சத்தீஷ்கரில் பாஜக 55 இடங்களைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகளில் வென்றுள்ளது.

தெலங்கானாவை பொறுத்தவரை அங்கு முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதன்மூலம், சந்திரசேகர ராவின் 10 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வருகிறது.மேலும், தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து தெலங்கானாவிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.  காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 64 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் மற்ற கட்சிகள் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. கமாரெட்டி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோரை வீழ்த்தி பாஜக வேட்பாளர் வெங்கடரமண ரெட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

Tags :
Advertisement