For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிவகங்கை | பட்டப்பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் வழிப்பறி - இருவர் கைது!

12:08 PM Dec 29, 2024 IST | Web Editor
சிவகங்கை   பட்டப்பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ 30 லட்சம் வழிப்பறி   இருவர் கைது
Advertisement

காரைக்குடியை சேர்ந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisement

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜாகிர் உசேன் தெருவில் டிசம்பர் 22-ம் தேதி பகலில் அரவிந்தன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் தன்னுடன் ரூ.30 லட்சம் பணத்தை தனியார் நிதி நிறுவனத்திற்கு கொண்டு சென்று சென்றுள்ளார். அப்பொழுது அவரது இரு சக்கர வாகனத்தின் மீது முன்புறமும் பின்புறமும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் மோதினர்.

பின்னர் அவரை கீழே தள்ளி அவரது முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்தனர். அவர் பணம் எடுத்து வந்த பையை மட்டுமல்லாமல் அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் காரைக்குடி வடக்கு காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். பின்னர் வழக்கு பதிவு செய்தனர். மர்ம நபர்களை கண்டுபிடிக்க காரைக்குடி டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதன் மூலம் இதில் தொடர்புடைய பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய காரைக்குடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் அவனது கூட்டாளியான காளையார் கோயிலை சேர்ந்த செல்வகுமார் என்பவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.12 லட்சம் மீட்டுள்ளனர். மேலும் திருச்சியை சேர்ந்த ஒரு நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags :
Advertisement