Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அன்னபூர்ணா சீனிவாசன் அவமதிப்பு | #RahulGandhi கண்டனம்!

01:14 PM Sep 13, 2024 IST | Web Editor
Advertisement

கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் அவமதிக்கப்பட விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், “இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு… கடை நடத்த முடியல மேடம்… ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினம் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அன்னப்பூர்ணா உணவக உரிமையாளர் அவமதிக்கப்பட விவகாரத்திற்க்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளிடிட்டுள்ள X தள பதிவில், “உணவக உரிமையாளரின் கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடனும் நடத்தப்படுகிறது. தன் கோடீஸ்வர நண்பர்கள் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற, தேசிய சொத்துகளை பெற முற்பட்டால், பிரதமர் மோடி சிவப்பு கம்பளம் விரிக்கிறார். பண மதிப்பிழப்பு, அணுக முடியாத வங்கிகள், வரி பறிப்பு, பேரழிவு தரும் ஜி.எஸ்.டி. போன்றவற்றை சிறு வணிகர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக சிறு வணிகர்களுக்கு கிடைப்பது மேலும் அவமானம் மட்டுமே. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்களின் பிடிவாதம் புண்படுத்தப்படும் போது அவமானத்தை மட்டுமே தருவார்கள் என்பது நன்கு தெரிகிறது" என தெரிவித்துள்ளார்.

Tags :
AnnapoornaBJPCoimbatoreCongressRahul gandhivanathi srinivasan
Advertisement
Next Article