#Youtube பார்த்து கொள்ளையடித்து வந்த திருடன் கைது!
பள்ளிக்கரணையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரவு
நேரங்களில் அடிக்கடி ஷட்டர் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கல்லாப்பெட்டியில்
வைத்திருக்கும் பணம் மற்றும் கடை பொருட்கள் கொள்ளை போவதாகப் புகார்கள் வந்தன.
இது தொடர்பாகக் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிக்கரணை காவல் நிலைய
குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியிலிருந்த சிசிடிவி
கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கிடைத்த உருவங்களுடன் பழைய
குற்றவாளிகளின் உருவங்களை ஒப்பிட்டு பார்த்தனர்.அதில் அந்த உருவம் பழைய
குற்றவாளியான ஆவடி, காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மன்மதன் என்கிற மதன்(27) என
தெரியவந்தது இதை அடுத்து போலீசார் பள்ளிக்கரணை பகுதியில் பதங்கி இருந்த அந்த
வாலிபரை கைது செய்தனர்.
பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை
நடத்தினர். தனியாக இவர் இரவு நேரங்களில் கடை ஷர்ட்டர் பூட்டு களை உடைத்துத்
திருடுவது குறித்து யூ ட்யூப் பார்த்து கற்று கொண்டு திருட்டு தொழிலில்
ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. திருடிய பணத்தை வைத்து உல்லாசமாக இருந்து வந்தது
தெரிகிறது
மேலும் இவர் மீது திருவள்ளூர், திருமுல்லைவாயில், ஆவடி, டேங்க் பேக்டரி,
சேத்துப்பட்டு ஆகிய காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளன என தெரியவந்தது.
இதை அடுத்து குற்றவாளி மதனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில்
அடைத்தனர்