For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான்...” - இபிஎஸ் கடும் விமர்சனம்!

அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
04:02 PM May 13, 2025 IST | Web Editor
அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
”அந்த சார் ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான்   ”   இபிஎஸ் கடும் விமர்சனம்
Advertisement

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 9 பேருக்கு இன்று(மே.13) சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிளா நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்-கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என அதிமுகவை விமர்சனம் செய்தார்.

Advertisement

இந்த நிலையில் முதலமைச்சரின் விமர்சனத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,  “அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்.

யார் வெட்கித் தலை குனிய வேண்டும்? அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமை  வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த இயலாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

யார் அந்த சார் என்ற என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க, மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்!”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement