”போரில் சிக்கிய குழந்தைகளின் சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும்” - புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தை சுமார் 3 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சு வார்த்தைக்கு பின் இரௌவரு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், ”எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. ஜோ படனுக்கு பதில் டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் தொடங்கியிருக் காது என கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "எங்களது பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. முடிவு எட்டவேண்டுமானால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உடன்பாடு வேண்டும். இனி எல்லாம் ஜெலன்ஸ்கியின் கையில் உள்ளது" என்றார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவியான மெலனியா டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பேச்சு வார்த்தையின் போது டிரம்ப் அதிபர் புதினிடம் அனத கடித்தத்தை அளித்துள்ளார். தற்போது அந்த கடிதத்தில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர்,
”ஒரு நாட்டின் கிராமப்புறப் பகுதியிலோ அல்லது அற்புதமான நகரத்தின் மையத்திலோ பிறந்திருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் இதயத்தில் ஒரே கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் அன்பும், வாய்ப்பும், அபாயத்தில் இருந்து பாதுகாப்பும் வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். பெற்றோர்களாக, அடுத்த தலைமுறையின் நம்பிக்கையை வளர்ப்பது நமது கடமை. தலைவர்களாக, நம் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு, ஒரு சிலரின் வசதிக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு ஆன்மாவும் அமைதியுடன் விழித்தெழ வேண்டும் என்பதற்காகவும், எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் நாம் பாடுபட வேண்டும் என்பதை மறுக்க முடியாது.
புவியியல், அரசாங்கம் மற்றும் சித்தாந்தத்திற்கு மேலே நிற்கும் ஒரு அப்பாவித்தனம் கொண்ட குழந்தைகளை பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மோதலில் சிக்கிய குழந்தைகளின் மெல்லிசை சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும். இந்த குழந்தைகளின் அப்பாவித்தனத்தைப் பாதுகாப்பதில், நீங்கள் ரஷியாவிற்கு மட்டும் சேவை செய்வதை விட அதிகமாகச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த குழந்தைகளுக்கு நீங்கள் பேனாவால் கையெழுத்திடுவது மூலம் உதவ முடியும்" என்று தெரிவித்துள்ளார்.