Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வரி செலுத்தினால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்" - காங். எம்.பி. சுதா விமர்சனம்!

08:30 AM Dec 26, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் வரிசெலுத்தினால் மட்டுமே வாழமுடியும் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா தெரிவித்துள்ளார்.

Advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

“இந்துக்கள் நாடு என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை அடித்து நொருக்கியவர் அம்பேத்கர். அவரைப்பற்றி இழிவாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். பதவியை ராஜினாமாக செய்ய வேண்டும் என்று எம்.பிக்கள் மக்களவையில் போராட்டம் நடத்தினோம். கடலை மிட்டாய், நாப்கின் உட்பட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதித்து 2 தொழில் அதிபர்களை வாழவைத்துகொண்டு இருக்கிறது மத்திய அரசு.

இந்தியாவில் உள்ள மக்கள் காலை முதல் இரவு தூங்கும் வரை வரி செலுத்தினால் மட்டுமே வாழமுடியும் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த வளத்தை அனுபவிக்கும் அதானியை பிரதமர் தாங்கிபிடித்துகொண்டு இருக்கிறார். டெல்டா மாவட்டம் விவசாய புண்ணிய பூமி. இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு உணவளிக்கும் இந்த மண்ணை காப்பாற்ற மாநில அரசு உதவியுடன் போராடுவோம். காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பிரச்னைகளை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

தமிழக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை செய்துள்ளார். மத்திய அரசு ஆயில் நிறுவனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை டெல்டாவை பாதுகாப்பதற்கு கொடுக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா 27-ம் தேதி சென்னை வரும்போது அவருக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழக மண்ணை தொட்டாலே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புகொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

Tags :
AmbedkarCongresscriticisesMayiladuthuraimpPressMeet
Advertisement
Next Article