For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெண் உயிரிழந்த விவகாரம் – நடிகர் அல்லு அர்ஜூன் கைது!

01:26 PM Dec 13, 2024 IST | Web Editor
பெண் உயிரிழந்த விவகாரம் – நடிகர் அல்லு அர்ஜூன் கைது
Advertisement

புஷ்பா-2 படம் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான வழக்கில், நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

புஷ்பா 2 படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச.4 அன்று திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் சென்றுள்ளார். அப்போது அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் தியேட்டர் முன்பு கூடியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரீமியர் காட்சி பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் மயக்கமடைந்தார். அவரது மகனுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

https://twitter.com/sekartweets/status/1867472265484677208?s=19

இதனையடுத்து சுயநினைவை இழந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ரேவதி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மகன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜூன் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக திரையரங்க உரிமையாளர் உட்பட மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

Tags :
Advertisement