For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மிக்ஜாம் புயல் வடதிசை நோக்கி நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றும் மழையும் குறையும்!” - பாலச்சந்திரன் பேட்டி!

07:49 PM Dec 04, 2023 IST | Web Editor
“மிக்ஜாம் புயல் வடதிசை நோக்கி நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றும் மழையும் குறையும் ”   பாலச்சந்திரன் பேட்டி
Advertisement

சென்னையில் இருந்து வடதிசை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு பலத்த காற்றும், மழையும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை, விமான சேவை அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே நாளை மிக்ஜாம் புயல் கரையை  கடக்கிறது. இதனால் நாளை அதிகாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்துள்ளது.

இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து வடதிசை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு பலத்த காற்றும், மழையும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement