தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில்பாலாஜி விளக்கம்!
கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கடந்த 27ம் தேதி நடந்த துயர சம்வத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
பொது நபராக இதுவரை இருந்து வருகிறேன். இதுபோல் இனி நடக்க கூடாது. முதல்வர் உத்தரவின்படி, அனைவருக்கும் உதவி செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பினார்கள். இது போன்ற துயர சம்பவம் இனி தமிழகத்தில் எங்கும் நடைபெற கூடாது. அரசியலாக பார்க்க விரும்பவில்லை, கரூரில் உயிரிழந்த குடும்பத்தை சந்தித்த போது வேடிக்கை பார்க்க சென்றாக கூறினார், ஆனால் அரசியல் ஆக்க விரும்பவில்லை.
தவெக கேட்ட இடம் லைட் ஹவுஸ் பகுதியில் எத்தனை பேர் நிற்க முடியும், லைட் ஹவுஸ் பகுதியில் அதிகபட்சமாக 7 ஆயிரம் பேர் நிற்க முடியும். நாங்கள் முப்பெரும் விழா நடத்தினோம் அதற்கு ஏற்ப இடங்களை தேர்வு செய்தோம். அந்த விழாவில் வருபவர்களுக்கு அனைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் தவெக பரப்புரை போது மக்கள் தண்ணீர் கூட இல்லாமல் அவதியுற்றனர். குறித்த நேரத்தில் கூட்டம் நடந்திருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது. அரசியல் கட்சி தான் இடங்களை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தவெக கூட்டம் நடைபெற்ற காட்சிகளை காட்சிபடுத்தினார்.
தொலைக்காட்சி அனைத்தும் நேரலையில் இருக்கும் போது மற்ற நபர்கள் எப்படி உள்ளே வர முடியும்? கூட்ட நெரிசலில் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்லுகிறார்கள். மின்சாரத்தை கூட்டம் நடத்துபவர்கள் கட் செய்கிறார்கள். பொதுவாக அரசியல் கட்சி கூட்டம் நடைபெறும் தலைவர்கள் மேலே இருபார்கள். ஆனால் இந்த கூட்டத்தில் 100 மீட்டர் இருக்கும்போது கூட அவர் உள்ளே இருந்தார். காவல்துறை கூட்டம் இருக்கும் இடத்திற்கு முன்பே பேச வேண்டும் என்று கூறினார்கள். 500 மீட்டர் இருந்த போது அவர் ஏன் உள்ளே இருந்தார்?
காவல்துறை சொல்லியும் கேட்கவில்லை, அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று கூறினார். உங்களை பற்றி பேசியபோது செருப்பு வீச்சு நடந்ததாக கூறினார்கள். ஆனால் பேச ஆரம்பித்து 6 நிமிடத்தில் செருப்பு வீசப்படுகிறது. என்னை பற்றி பேசியது 14 நிமிடத்தில் வருகிறது. அப்போது செருப்பு விச்சு நடைபெறவில்லை, 2 ஆம்புலன்ஸ் நாமக்கலில் இருந்து கூடவே வருகிறது.
தவெக சார்பில் 5 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து இருந்தனர். வாட்டர் பாட்டில், நள்ளிரவில் கேட்டார்கள் அதனால் என்னுடைய அறக்கட்டளையில் இருந்ததை கொடுத்தோம். நான் அருகில் தான் இருந்தேன், எனக்கு தகவல் கிடைத்த உடனே சென்றேன். மருத்துவமனை அருகில் தான் இருந்தேன். மக்கள் பாதிக்கபடும் போது நான் சென்னை செல்லவா முடியும்?
நான் இருக்கும் வரை என் மாவட்டத்திற்கு அனைத்தும் செய்வேன், நடந்த சம்பவத்தை மடைமாற்ற முயற்சி செய்தால் கட்டுபாடு இல்லாத கூட்டம், கூட்டத்தை வழி நடத்த தலைவர் யாராவது இருந்தார்களா?
ஒலி பெருக்கில் பேசும் போது சத்தம் கேட்காததால் கூட்டம் முன்னே வந்தது. உண்மை கண்டறியும் குழு மணிப்பூர் சென்று இருந்தால் நன்றாக இருக்கும், கும்பமேளா சென்று இருந்தால் நன்றாக இருக்கும். கள்ளசாராயம் சம்பவத்திற்கு துணை முதல்வர் சென்று பார்த்தார். கத்தியில் கிழித்து இருந்தால் அவர் மருத்துவமனை போய் இருக்கலாமா எங்கே போனார்? என்னை பற்றி அரசியல் கருத்து சொல்ல முடியவில்லை.
அதனால் என்னை தனிப்பட்டு முறையில் விமர்சனங்கள் செய்கிறார்கள். இன்று முதல் எடப்பாடி பழனிச்சாமி 10 ரூபாய் பழனிச்சாமி என்று அழைக்கப்படுவார். திமுக ஆட்சியில் தவெக தலைவர் விஜய் 10 நிமிடம் பேசி 41 பேர் உயிரிழந்தனர். யார் தவறு செய்திருந்தாலும். அது தவறு. காவல்துறை விஜய்யை உள்ளே இருங்கள் என்று யாரும் சொல்ல வில்லை. கூட்டம் அதிகமாக இருக்கும் போது முன்பே பேச வேண்டும் என்று தான் கூறினார்கள். காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார் தவெக தலைவர் விஜய். தொலைக்காட்சி எந்த கூட்டம் நடத்தினாலும் சீர் தூக்கி பார்க்கவேண்டும். கரூர் மாவட்டம் இது மாதிரி நிகழ்வு நடைபெற கூடாது என்று தெரிவித்துள்ளார்.