காங்கிரஸ் தோற்கும் போது மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்..? - உள்துறை அமைச்சர் அமித்ஷா..!
மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது எஸ்.ஐ.ஆர். தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து பேசினார். அவர் பேசியது,
”தேர்தல் சீர்த்திருத்தம் குறித்து விவாதம் வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிய பிறகு விவாதத்திற்கு சம்மதம் தெரிவித்தோம். தேர்தல் சீர்திருத்தம் குறித்து மட்டுமே விவாதம் நடத்த சம்மதித்தோம். ஆனால் எதிர்க்கட்சிகளில் பலரும் எஸ்.ஐ.ஆர் குறித்து பேசியுள்ளனர்.
நாடு முழுவதும் தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் தலைமை ஆணையருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் எந்த வாக்களரும்ப வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பது எங்களது விருப்பமும். வாக்காளர் பட்டியலில் யார் இடம் பெற வேண்டும்? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பதை எல்லாம் இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். அதற்கான அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
கடந்த காலங்களிலும் நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடத்தப்பட்டு இருக்கிறது. 1952ல் நாட்டின் முதன் முதலாக எஸ் ஐ ஆர் பணிகள் நடைபெற்றது அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நேரு பிரதமராக இருந்தார். இரண்டாவது முறையாக 1957 , 1969 வரை நேரு பிரதமராக இருந்தபோது எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றுள்ளது. 1983-84 ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றுள்ளது. நாட்டில் இறுதியாக 2002-வரை நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் பணிகளை யாரும் எதிர்க்கவில்லை காரணம் நியாயமான நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக எஸ்.ஐ.ஆர் பணிகள் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டது போலவே இப்போது 2025-லும் எஸ்ஐஆர் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் , 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட வேண்டும், வெளிநாட்டில் உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை எஸ்.ஐ.ஆர்-ன் நோக்கம்.
நாட்டில் பல இடங்களில் ஒரு நபருக்கு வாக்குரிமை இருந்தால் அது சரியானதா? இறந்த ஒருவரின் வாக்கு வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டுமா? ஒரு நபரின் வாக்குரிமை பல இடங்களில் இருப்பதும், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதும் ஒரு சிலரின் அரசியல் நலனுக்கு பயன்கள் கிடைக்கிறது. அந்த கட்சிகளுக்கு என் அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த நவம்பர் 5ம் தேதி அன்று , எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு அணுகுண்டு வீசினர். பீகார் மாநிலத்திலே ஒருவரின் வயது 124 என உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார் ஆனால் அது விண்ணப்பம் பதிவு செய்யப்படும் போது 24 வயது என்பது தவறாக 124 வயதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற ராஜஸ்தான்,சதீஷ்கர், மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தேர்தல்களிலும் பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளது. அப்போதும் இதே வாக்காளர் பட்டியலில் தான் தேர்தல் நடைபெற்று உள்ளது ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு மாநிலத்தில் தோல்வியடையும் போது மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம் சாட்டப்படுகிறது ஏன்..? என்றார்.