வாழை #Climax காட்சியில் பூங்கொடி டீச்சர் இடம்பெறாதது ஏன் ? - #DirectorMariSelvaraj சொன்ன சுவாரஸ்ய பதில்!
வாழை திரைப்படத்தில் பூங்கொடி டீச்சர் இடம்பெறவில்லை என விமர்சகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் அதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியிருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் கதை, மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படத்தில் நிகிலா விமல் பூங்கொடி டீச்சர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : #Emergency-யை திரைத்துறை ஆதரிக்கவில்லை – கங்கனா ரனாவத் வேதனை!
இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலராலும் பாராட்டப்பட்டாலும் சிலரால் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் செப்.27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் சில காட்சிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு மாரி செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
வாழை திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பூங்கொடி டீச்சர் கதாபாத்திரத்தை காட்டவில்லை, அவர் என்ன ஆனார் என சில விமர்சகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ் “ கிளைமேக்ஸ் காட்சியில் பூங்கொடி டீச்சர் இடம்பெற்றிருப்பது போலவும் அவரது மடியில் சிவனணைந்தான் அழுவது போலவும் படமாக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் பாதகத்தி பாடல் படமாக்கப்பட காலதாமதமானது. அந்த நேரத்தில் நிகிலா விமலின் கால்ஷீட்டும் நிறைவடைந்துவிட்டது. சிவனணைந்தானின் கதையும் இன்னமும் அவனுக்குள் சொல்லக் கூடிய கதைகளும் வலியும் இருக்கின்றன. அதை வாழை 2வாக விரைவில் எடுப்பேன் ” என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.