”கடிதம் மட்டுமே எழுதும் முதலமைச்சர் எதற்கு..?” - அன்புமணி ராமதாஸ்..!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று திருப்பூர் அரிசி கடை வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அவர் பேசியது,
” திருப்பூர் என்றால் டாலர் சிட்டி. இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆனால் அப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு எந்த ஒரு அடிப்படை கட்டுமானங்களும் வசதிகளோ இல்லாத ஒரு மாநகரம் திருப்பூர். திருப்பூரில் மட்டும் மாதம் 15 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. போதை மாநிலம் என்றால் அது தமிழ் நாடு தான். போதைக்கு பெயர் போன பஞ்சப் மாநிலத்தை தமிழ்நாடு மிஞ்சிவிட்டது. மதுவை தாண்டி தற்போது கஞ்சா, அபின், போன்ற பல போதை மருந்து புழக்கத்தில் உள்ளது. இதனை தடுக்க திமுகவிற்கு திராணி இல்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் 25லட்சம் பேர் போதைக்கு அடிமை ஆகியுள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டுவந்தது நான். 28 மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சினிமா துறையில் அதிகக்கம் திமுக குடும்பம் தான். யார் படம் எடுத்தாலும் இவங்க நினைத்தால் தான் படம் வெளி வரும்.
தமிழக முதல்வர் எந்த பாதிப்பாக இருந்தாலும் கடிதம் மட்டுமே எழுதுவார். கடிதம் மட்டும் எழுத முதல்வர் எதற்கு..?. இந்த மாவட்டத்தில் 8 தொகுதி உள்ளது. வரும் தேர்தலில் திமுக இந்த தொகுதிகளில் டெபாசிட் இழக்க வேண்டும்” என்றார்.