For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாதயாத்திரையில் பணக்காரர்களை மட்டும் அண்ணாமலை சந்திப்பது ஏன்..? - ஈஸ்வரன் எம்எல்ஏ கேள்வி

01:15 PM Oct 31, 2023 IST | Web Editor
பாதயாத்திரையில் பணக்காரர்களை மட்டும் அண்ணாமலை சந்திப்பது ஏன்      ஈஸ்வரன் எம்எல்ஏ கேள்வி
Advertisement

பாதயாத்திரையில் பணக்காரர்களை மட்டும் அண்ணாமலை சந்திப்பது ஏன்..? என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரான ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திருச்செங்கோட்டில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, திருச்செங்கோடு தொகுதியில் எனது செயல்பாடுகள்  எதுவுமே இல்லை எனவும் சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதி பற்றி துதி பாடுவது தான் எனது வழக்கம் என பேசியுள்ளர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் பேச வேண்டும். இரண்டரை ஆண்டு காலத்தில் சட்டமன்றத்தில் நான் உதயநிதி பற்றி பேசியிருந்தால் ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும்.

எனது செயல்பாடு பற்றி பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஏதோ குறை சொல்ல வேண்டும் என பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனது தொகுதிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில்  சட்டமன்றத்தில் நான் பேசியுள்ளேன்.

இந்த விவகாரத்தில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க அண்ணாமலை தயாரா ? எங்கே , எப்போது என ஊடகங்கள் முன்னிலையில் அண்ணாமலை சொல்ல வேண்டும். இல்லையென்றால் நான் பேசியது தவறு என அண்ணாமலை ஒட்புக் கொள்ள வேண்டும். அண்ணாமலை ஒவ்வொரு முறையும் பாதயாத்திரை மேற்கொள்ளும் போதும் அப்பகுதியில் உள்ள பணக்காரர்களை மட்டும் சந்திப்பது ஏன்.

நாமக்கல்லில் புதியதாக அமையவுள்ள பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயரை வைப்பதை தவிர்த்து கவிஞர் இராமலிங்கம், தீரன் சின்னமலை மற்றும் சுதந்திர போராட்ட வீரர் காலியண்ணக் கவுண்டர் போன்றவர்கள் பெயரை வக்கலாம் என்ற அண்ணாமலையின் கருத்திற்கு எங்கள் கட்சியின் சார்பில் ஆதரவு அளிக்கின்றோம்.

2014 ஆம் ஆண்டு வளர்ச்சி என கூறி விட்டு தேர்தலை சந்தித்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில் எந்த வளச்சியும் இல்லை. அனைத்து தொழில்களும் நலிவடைந்து விட்டன. தற்போது மதம் , ஆன்மிகம் குறித்து பேசுகின்றனர். ஆளுநர் வாரம் ஒரு முறை ஒரு கருத்துக்களை கூறி வருகின்றார். அவருடைய கருத்துகளுக்கு கட்சியினரும் பதில் அளிக்கின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை தனிப்பட்ட முறையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.  மாநில தலைவராக இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது அழகு அல்ல” என  தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement